கீதார்த்தசங்க்ரஹம்

अचिन्मिश्राद्विशुद्धाच्च चेतना पुरुषोत्तमः ।
व्यापनाद्भरणास्वाम्यात् अन्यः पञ्चदशोदितः ।। १९ ।।
அசிந்மிஶ்ராத்3விஶுத்3தா4ச்ச சேதநாத் புருஷோத்தம: |
வ்யாபநாத்3ப4ரணாத் ஸ்வாம்யாத் அந்ய: பஞ்சத3ஶோதி3த: || 19 ||

அசிந்மிஶ்ராத்3 (சேதநாத்)

அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் ப3த்3த4 ஜீவனைக் காட்டிலும்

விஶுத்3தா4த் சேதநாத் ச

ப்ராக்ருதஶரீரத்திலிருந்து விடுபட்டுப் பரிஶுத்3தி4யடைந்த முக்தஜீவனைக்காட்டிலும்

வ்யாபநாத்

(அவர்களை) வியாபித்திருக்கையாலும்

ப4ரணாத்

(அவர்களைத்) தாங்குகையாலும்

ஸ்வாம்யாத்

(அவர்களை) உடையவனாயிருக்கையாலும்

அந்ய:

வேறுபட்டவனான

புருஷோத்தம:

புருஷோத்தமனான நாராயணன்

பஞ்சத3ஶோதி3த:

(கீ3தையின்) பதினைந்தாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top