கீதார்த்தசங்க்ரஹம்

नित्यात्मा सङ्गकर्महागोचरा सांख्ययोगधीः ।
द्वितीये स्थितधीलक्षा प्रोक्ता तन्मोहशान्तये ॥ ६ ॥
நித்யாத்மாஸங்க3 கர்மேஹாகோ3சரா ஸாங்க்2யயோக3 தீ4: |
த்3விதீயே ஸ்தி2ததீ4லக்ஷா ப்ரோக்தா தந்மோஹஶாந்தயே || 6 ||

நித்ய ஆத்ம ஸங்க3 கர்ம ஈஹா கோ3சரா

என்றுமிருக்கும் ஆத்மதத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டான மென்ன இவற்றை விஷயமாகக்கொண்டதாய்

ஸ்தி2ததீ4 லக்ஷ

ஸ்தி2தப்ரஜ்ஞ தசையை லட்சியமாகக்கொண்டதான

ஸாங்க்2யயோக3 தீ4:

ஆத்மஜ்ஞானமும், கர்மயோகத்தைப் பற்றிய அறிவும்

தந்மோஹஶாந்தயே

அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக

த்3விதீயே

இரண்டாம் அத்தியாயத்தின் பிற்பகுதியில்

ப்ரோக்தா

உபதேசிக்கப்பட்டது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top