பகவத் கீதை வெண்பா
பகவத்கீதை வெண்பா பாயிரம்
கண்ணாநீ பார்த்தற்குக் காத்தற் கினிதுரைத்த
திண்ணார் திறமருளுஞ் சீர்கீதை யெண்ணாரு
நன்பொருளை யெங்கட்கு நாதா வருளுதலாற்
புன்பொருளிற் போகா புலன்.
ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா முதல் அத்யாயம் -
அர்ஜுனவிஷாதயோகம்
வேண்டிடத்தி லன்றி வெறுத்து நலமிரக்கம்
பூண்டவற்றைப் பொல்லாப் புலமென்று – மீண்டகன்று
சுற்றமது நோக்கியே சோகித்த தேர் விசய
னுற்றமயல் சொல்லுமுத லோத்து.
பூண்டவற்றைப் பொல்லாப் புலமென்று – மீண்டகன்று
சுற்றமது நோக்கியே சோகித்த தேர் விசய
னுற்றமயல் சொல்லுமுத லோத்து.
ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா இரண்டாம் அத்யாயம் - ஸாங்க்யயோகம்
மேலிரண்டா மோத்தால் விசயன் வெறுப்பகற்றக்
கோலி யுயிருடலின் கூற்றிவைகள் – காலியுடன்
போமாயன் மன்னுயிர்கள் பொன்றாமை முன்னகமா
மாமாயன் சொன்னான் மகிழ்ந்து.
கோலி யுயிருடலின் கூற்றிவைகள் – காலியுடன்
போமாயன் மன்னுயிர்கள் பொன்றாமை முன்னகமா
மாமாயன் சொன்னான் மகிழ்ந்து.
ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா மூன்றாம் அத்தியாயம்- கர்மயோகம்
மூன்றாமோத் தாகுமிது முன்னுரைத்த புந்தியினும்
ஏன்றா வதுகரும மென்பதனா – லான்றமைந்து
தன்கருமஞ் செய்யுமதே தக்கதென மிக்குரைக்கும்
வன்கருமந் தீரும் வகை.
ஏன்றா வதுகரும மென்பதனா – லான்றமைந்து
தன்கருமஞ் செய்யுமதே தக்கதென மிக்குரைக்கும்
வன்கருமந் தீரும் வகை.
ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா நான்காம் அத்தியாயம்- ஞான (விபாக) யோகம்
நாராயணன்கீதை நாலாமோத் திற்றனது
சீரார் பிறவிச் சிறப்புடனே – யேராரும்
யோகத் துடன்கரும முற்றியலு மாறுரைக்கு
மேகப் பலபரிசா வேய்ந்து.
சீரார் பிறவிச் சிறப்புடனே – யேராரும்
யோகத் துடன்கரும முற்றியலு மாறுரைக்கு
மேகப் பலபரிசா வேய்ந்து.
ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா ஐந்தாம் அத்யாயம்-ஐந்தாமத்தியாயம்
கரும விடுமறிவுங் கண்ணவதற் பின்னு
மொருமையுடன் யோகு முரைத்தி-யிருமையிலு
மொன்றுரைப்பா யென்றுரைத்தான் பார்த்தனுயரிறையும்
நின்றுரைத்தா னிச்சயத்தை நேர்ந்து.
மொருமையுடன் யோகு முரைத்தி-யிருமையிலு
மொன்றுரைப்பா யென்றுரைத்தான் பார்த்தனுயரிறையும்
நின்றுரைத்தா னிச்சயத்தை நேர்ந்து.
ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா ஆறாம் அத்தியாயம்- அத்யாத்மயோகம்
கன்மபலனண்ணாது காரியமென் றுன்னியவத்
தன்மையுமத்தூய்மனத்திற்சார்ந்தியல்வா – னன்மையமர்
ஞானியவன் யோகியவ னல்லங்கி யிற்கிரிசை
தானிகழா னென்றுஞ் சமைந்து.
தன்மையுமத்தூய்மனத்திற்சார்ந்தியல்வா – னன்மையமர்
ஞானியவன் யோகியவ னல்லங்கி யிற்கிரிசை
தானிகழா னென்றுஞ் சமைந்து.
ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா ஏழாவது அத்யாயம்- விஜ்ஞானயோகம்
முன்னாறு நல்லுணர்வின் முற்றுங் கருமத்தால்
தன்னார் உயிருணர்வு தானுரைத்துப்-பின்னார்வத்
தேறு மனத்தா லிறைவன்பா லன்புசெயல்
கூறு நடுவாறுங் கூர்ந்து.
தன்னார் உயிருணர்வு தானுரைத்துப்-பின்னார்வத்
தேறு மனத்தா லிறைவன்பா லன்புசெயல்
கூறு நடுவாறுங் கூர்ந்து.
ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா எட்டாம் அத்யாயம்-அப்யாஸயோகம்
போக முயிருண்மை பூமகள் கோனைப்பெறுதற்
காக முயல்வார்க் கறிவமர , மேகநிறத்
தெம்மா னருள்கீதை யெட்டாமோத் திற்பொருள்கள்
செய்ம்மா வகையுரைக்குஞ் சேர்ந்து.
காக முயல்வார்க் கறிவமர , மேகநிறத்
தெம்மா னருள்கீதை யெட்டாமோத் திற்பொருள்கள்
செய்ம்மா வகையுரைக்குஞ் சேர்ந்து.
ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா ஒன்பதாம் அத்யாயம்- ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
உன்னப் படும்பர னொண்சீர் மருவுயா்த்தி
மன்னப் பயில்ஞான வாசிதான் – றன்னமா்ந்து
நின்றியலும் பத்தி நிகழ்ந்துரைத்த நற்கீதை
யொன்றியசீ ரொன்பதா மோத்து.
மன்னப் பயில்ஞான வாசிதான் – றன்னமா்ந்து
நின்றியலும் பத்தி நிகழ்ந்துரைத்த நற்கீதை
யொன்றியசீ ரொன்பதா மோத்து.
ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா பத்தாம் அத்யாயம்- விபூதியோகம்
அண்ண லுலகி லனைத்துந்தா னாய்நின்ற
வணணம் விரித்துரைத்த வண்மையினைத்- திண்ணமாங்
கனபுறவே யோங்க வருள்கீதை பத்தாமோத்
தின்புறவே யோது மெடுத்து.
வணணம் விரித்துரைத்த வண்மையினைத்- திண்ணமாங்
கனபுறவே யோங்க வருள்கீதை பத்தாமோத்
தின்புறவே யோது மெடுத்து.

