பகவத் கீதை வெண்பா
ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா பதினோராம் அத்தியாயம் - விசுவரூபதர்சனம்
பார்த்தனுக்கு மாயனருள் கீதைப் பதினொன்றா
மோத்திவ வுலகெல்லா முடம்பதனிற் – கோத்தபடி
காட்டுமது தன்னறிவு கண்டடைத் றன்பத்தி
கூட்டுமதுஞ் சொல்லுங் குறித்து.
ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா பன்னிரெண்டாம் அத்யாயம் - பக்தியோகம்
பத்தி யறிவாற் கடக்கும் பலவகையு
மத்தி லுகபபி னதிசயமு-முத்தி தரும்
பண்பி னருள்கீதை பன்னிரண்டா மோத்துரைக்குந்
திண்பயிலுஞ் சொல்லாற செறிந்து.
ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா பதிமூன்றாம் அத்யாயம் - க்ஷேத்ர க்ஷேத்ரஞ்ஞ விபாகயோகம்
கன்ற முயிருணர்வாற் கட்டவரு முன்னாறு
நன்மையிறை பத்தி நடுவாறு- தன்மையுடன்
காயமுயி ரீசன் கருமமறி வன்புவகை
யேயவமைந் தேலுமீ றாறு
ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா பதினான்காம் அத்தியாயம் - குணத்ரய விபாக யோகம்
முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பதுவு
மக்குணங்க ணீங்குவிக்கு மவ்விரகு – மிக்குயர்ந்த
கீதை பதினாலா மோத்துக் கிளர்ந்துரைக்கும்
போதத் தியல்பாற் புரிந்து.
மக்குணங்க ணீங்குவிக்கு மவ்விரகு – மிக்குயர்ந்த
கீதை பதினாலா மோத்துக் கிளர்ந்துரைக்கும்
போதத் தியல்பாற் புரிந்து.
ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா பதினைந்தாம் அத்தியாயம் - புருஷோத்தமயோகம்
மன்னு மசித்தின் மருவியமர் சித்தினுமா
றுன்னு முயிர்வகையி லுத்தமனா மன்னியவை
மீதுள் பரந்து பரித்திறையாய் மேவினனை
யோதும் பதினைந்தா மோத்து.
ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா பதினாறாம் அத்யாயம் - தெய்வாசுரஸம்பத் விபாகயோகம்
தன்மையாற் றேவ ரசுரரெனச் சார்பிறவி
நன்மைசேர் சாத்திரத்தினாடுதலும் – தொன்மை
யுரைக்கங் கறிவுரைப்புக் காட்டுதற்குக் கீதை
யுரைக்கும் பதினாறா மோத்து.
நன்மைசேர் சாத்திரத்தினாடுதலும் – தொன்மை
யுரைக்கங் கறிவுரைப்புக் காட்டுதற்குக் கீதை
யுரைக்கும் பதினாறா மோத்து.
ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா பதினேழாம் அத்யாயம் - சிரத்தாத்ரய விபாகயோகம்
ஆசுரமா மின்மை சாத்திரந்தான் சாத்திரத்திற்
றேசுடைய கன்மஞ் செறிகுணத்தாற் – பேசுநெறி
சேர்ந்தேயிம் முக்குணங்கள் செப்புமே மூவகையா
வோர்ந்தே பதினேழா மோத்து.
றேசுடைய கன்மஞ் செறிகுணத்தாற் – பேசுநெறி
சேர்ந்தேயிம் முக்குணங்கள் செப்புமே மூவகையா
வோர்ந்தே பதினேழா மோத்து.
ஸ்ரீமத் பகவத்கீதை வெண்பா பதினெட்டாம் அத்யாயம் - மோக்ஷோபதேச யோகம்
செய்கருமத் தீசனே கர்த்தாவாச் சிந்திப்பு(ம்)
மெய்கருதுஞ் சத்துவத்தின் மெய்ப்பாடு – முய்கருமஞ்
சாருங் கதியுமிச் சாரத்தின் சாரமுமுற்
றோரும் பதினெட்டா மோத்து.
மெய்கருதுஞ் சத்துவத்தின் மெய்ப்பாடு – முய்கருமஞ்
சாருங் கதியுமிச் சாரத்தின் சாரமுமுற்
றோரும் பதினெட்டா மோத்து.

